தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.1.12

அபுதாபி:இஸ்லாத்தை அவமரியாதை செய்த பிரிட்டன் பொறியாளருக்கு சிறைத் தண்டனை


லண்டன்:பிரிட்டனை சேர்ந்த பொறியாளர் ஒருவர் இஸ்லாத்தை அவமரியாதை செய்வது போல் கோபத்துடன் பேசியதற்காக ஐக்கிய அமீரகத்தை சேர்ந்த அபுதாபி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கிறது.பூங்காங்கள் மற்றும் அபுதாபி நகராட்சியின் பொழுதுபோக்கு பிரிவில்  பொறியாளராக பணிபுரியும்  இவர், மஸ்ஜிதின் சுற்றுப் புற சூழலை அழகுப்படுத்தும்வேளையில் பொறுப்பாளரா

க இருக்கும் அவர் தனது சக ஊழியர்களுடன் உரையாடும்போது எப்பொழுது முடிப்போம் இந்த “Damn Mosque” என்று மிகவும் கோபத்துடன் கூறியதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை மேல்முறையீடு செய்த இவர், நீதிபதியிடம்; “நான் மதத்தையோ அல்லது மஸ்ஜிதையோ  அவமரியாதை செய்யும் அர்த்தத்தில் நான் அப்படி கூறவில்லை என்றும், நான் இஸ்லாத்தையும், ஐக்கிய அமீரகத்தையும் மதிக்கிறேன்” என்று தெரிவித்ததாக ‘தி நேசனல்’ தினசரி பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
‘அவர் பணியுரியும் இந்த பணித் திட்டம் மிகவும் மெதுவாக செல்வதாலும்,  தனது சக ஊழியர்கள் அவர் மனதை புண்படுத்தும் வண்ணம் கேள்வி எழுப்பியதாலும், அவர் தன்னை மறந்த நிலையில் இப்படி கூறி விட்டார்’  என்று பிரிட்டன் விளக்கம் கொடுத்துள்ளது.
“நான் விரைவில் இந்த பணித் திட்டத்தை முடிக்க வேண்டும் என்று கருதினேன்” என்று அவர் அளித்த பதிலுக்கு, நீதிபதி, “பணியை விரைவில் முடிக்க வேண்டும் என்ற ஆர்வமே உங்களை சாபமிட வைத்தா?” என்று வினவினார்.
மேலும் இந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: