தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.11

60 வயதை கடந்தவர்கள் மந்திரி பதவி வகிக்க கூடாது: ப.சிதம்பரம் கருத்து


மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-  
 
தற்போதைய இளம் தலைவர்கள் மீது நான் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வர வேண்டும். அவர்களுக்கு உரிய பொறுப்பு கொடுக்கப்பட வேண்டும்.
 
மத்திய மந்திரி சபையில் 40 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக அளவில் காபினெட் அந்தஸ்து பதவி கொடுக்கப்பட வேண்டும். நான் உள்பட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவி வகிக்கக்கூடாது.
 
ராகுல்காந்தி உரிய நேரத்தில் பிரதமர் ஆக்கப்பட்டால், காங்கிரஸ் கட்சி மிகவும் மகிழ்ச்சி அடையும்.   பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு 7-வது ஆண்டாக நடந்து கொண்டிருக்கிறது. எங்கள் அரசு பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. அதே சமயத்தில் சில பிரச்சினைகளும் உள்ளன.
 
பிரதமரும், மத்திய மந்திரிகளும் சிறப்பான சேவை செய்து வருகிறார்கள். இன்னும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்ற உணர்வு பிரதமரிடம் காங்கிரஸ் தலைவரிடமும் இருக்கிறது.  
 
வாழ்க்கையில் மீதமுள்ள நாட்களை எப்படி கழிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் நிறைய படிக்க விரும்புகிறேன். பயணம் செல்ல விரும்புகிறேன். எனக்குள் ஒரு எழுத்தாளர் இருப்பதாக நினைக்கிறேன். எனவே நிறைய எழுத ஆசைப்படுகிறேன்.
 
எழுத்தாளர் அருந்ததிராயின் எல்லா கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவரது எழுத்து பாணி எனக்கு பிடிக்கும். மந்திரி பதவியை முடிவு செய்யும் அதிகாரம் பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவருக்கும் மட்டுமே உள்ளது. அவர்கள் இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
 
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

0 கருத்துகள்: