தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.5.12

ஈரான் விஞ்ஞானிகளுடன் அணு சக்தி கழக தலைவர் சந்திப்பு


ஈரானின் அணு சக்தி விஞ்ஞானிகளை சர்வதேச அணு சக்தி கழகத்தின் தலைவர் யுகியா அமனோ சந்தித்து ஆலோசனை நடத்தினார்.ஈரான் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது என்று அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.உள்நாட்டு மக்கள் வளர்ச்சிக்காக அணு சக்தி திட்டங்களை செயல்படுத்தி வருவதாக ஈரான் கூறி வருகிறது. அத்துடன் அந்த திட்டங்களை பார்வையிட சர்வதேச குழுவை அனுமதிக்கவும்
மறுத்துவிட்டது.இதுதொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடந்த பின்னர், சர்வதேச
அணு சக்தி கழக தலைவரை சந்திக்க ஈரான் அரசு ஒப்புக் கொண்டது. அதன்படி அணுசக்தி கழக தலைவர் யுகியா அமனோ நேற்று முன்தினம் ஈரான் தலைநகர் டெஹ்ரான் வந்தார்.
ஈரான் அணு சக்தி விஞ்ஞானிகள், அதிகாரிளை நேற்று சந்தித்த அமனோ அணு சக்தி திட்டங்கள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
ஈரான் அணு சக்தி திட்ட தலைவர் சயீத் ஜலீலுடன் தனியாக பேச்சு நடத்தினார். இதுகுறித்து ஈரான் ஈரான் அணுசக்தி அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அணு சக்தி திட்டங்கள், அணு ஆயுதங்கள் பிரச்னை குறித்து வெளிப்படையாக பேச்சு நடந்தது. ஈரான் மீதுள்ள சந்தேகத்தை போக்க இந்த சந்திப்பு உதவும் என்று தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து அமனோ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

0 கருத்துகள்: