புதுடெல்லி:கேபினட் அமைச்சர்களை நியமித்து தற்போதைய அமைச்சர்களின் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி பிரதமர் மன்மோகன்சிங் அமைச்சரவையை புனரமைத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் உள்பட நான்குபேர் தனி பொறுப்புடைய இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதியவர்கள் 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த இ.அஹ்மதிற்கு தனிப்பொறுப்பு வழங்கப்படவில்லை. மாறாக, மனித வள மேம்பாட்டுத்துறையில் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்ட அமைச்சராக பதவி வகித்த வீரப்ப மொய்லி அத்துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக இனி சட்டத்துறை அமைச்சராக சல்மான் குர்ஷித் நீடிப்பார். சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டு கிராம வளர்ச்சித்துறை வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் இன்று மாலை 5 மணிக்கு பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள்
புதிதாக பதவியேற்கவுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு:
கேபினட் அமைச்சர்கள்:
1. வி கிஷோர் சந்திர தியோ – பழங்குடியினர் விவகாரம் மற்றும் பஞ்சாயத்து ராஜ்
2. பேனி பிரசாத் வர்மா – ஸ்டீல்
3. தினேஷ் திரிவேதி – ரயில்வே
4. ஜெய்ராம் ரமேஷ் – ஊரக வளர்ச்சித் துறை
இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு):
5. ஸ்ரீகாந்த் ஜெனா – புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம், ரசாயனம்
6. ஜெயந்தி நடராஜன் – சுற்றுச்சூழல்
7. பிரணாப் சிங் கடோவர் – வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி
8. குருதாஸ் காமத் – குடிதண்ணீர் மற்றும் சுகாதாரம்
இணை அமைச்சர்கள்:
9. சுதிப் பந்தோபத்யாய – உடல்நலம் மற்றும் குடும்பநலம்
10. சரண் தாஸ் மகந்த் – விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை
11. ஜித்தேந்திர சிங் – உள்துறை
12. மிலிந்த் தியோரா – தகவல் தொடர்பு
13. ராஜீவ் ஷுக்லா – நாடாளுமன்ற விவகாரம்
இலாகா மாற்றப்பட்டவர்கள்:
கேபினட் அமைச்சர்கள்:
விலாஷ் ராவ் தேஷ்முக் -அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை
வீரப்ப மொய்லி – கம்பெனி விவகாரத்துறை
ஆனந்த் சர்மா – வர்த்தகம், கூடுதலாக ஜவுளித்துறை
பவன் குமார் பன்சால் – நாடாளுமன்ற விவகாரம் மற்றும் கூடுதலாக நீர் வளம்
சல்மான் குர்ஷித் : சட்டம், கூடுதலாக சிறுபான்மை விவகாரங்கள்
இணை அமைச்சர்கள்:
இ. அகமது – வெளியுயறவுத் துறை மற்றும் மனித ஆற்றல்
வி. நாராயணசாமி – ஊழியர் நலன், ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகம்
ஹரிஷ் ராவத் : விவசாயம் மற்றும் உணவு பதனிடும் தொழிற்சாலை, நாடாளுமன்ற விவகாரம்
முகுல் ராய் – கப்பல்
அஷ்வனி குமார் – திட்டம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல்
அமைச்சர் பதவியை இழந்தவர்கள்:தயாநிதி மாறன், முரளி தியோரா, பி.கே.ஹண்டிக், எம்.எஸ்.கில், காந்திலால் பூரியா, சாய் பிரதாப், அருண் எஸ்.யாதவ்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக