டெஹ்ரான்:விமான தாங்கி கப்பலை தயாரிக்க தேவையான தொழில்நுட்பம் தங்களிடம் இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் கடற்படை கமாண்டர் ரியர் அட்மிரல் ஹபீபுல்லாஹ் ஸய்யாரி இதனை தெரிவித்துள்ளார்.அணுசக்தி திட்டங்களின் பெயரால் ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வரும் சூழலில் விமான தாங்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க தங்களால் இயலும் என்ற ஈரானின் அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத் தக்கது.
தற்போதைய தொழில்நுட்ப பயன்படுத்தி நாட்டின் அனைத்து ராணுவ பிரிவுகளுக்கும் தேவையான ஆயுதங்களும், உபகரணங்களும் தயாரிக்க போதுமான தொழில்நுட்பம் ஈரான் பெற்றுள்ளது என்று ஹபீபுல்லாஹ் ஸய்யாரி கூறுகிறார்.
அதேவேளையில், விமானம் தாங்கி கப்பல்களை தயாரிக்க ஈரானின் பாதுகாப்புத்துறை மற்றும் கடற்படையின் முக்கியமான பரிசீலனைக்குரிய காரியம் அல்ல என்றும், தேவைப்பட்டால் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஸய்யாரி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக