அட்டையில் அழகிகளின் நிர்வாண படத்தை வெளியிடுவதில்லை என்று ஜெர்மனியை சேர்ந்த பாரம்பரிய நாளிதழ் முடிவு செய்திருக்கிறது.ஜெர்மனியில் 60 ஆண்டுகளாக வெளிவரும் நாளிதழ் ‘பில்டு’. ஞாயிற்றுக்கிழமைகள், அரசு விடுமுறைகள் தவிர அனைத்து நாட்களும் வரும். ஜெர்மனியில் அதிகம்
விற்பனையாகும் நாளிதழ். உலக அளவில் 6-வது இடத்தில் இருக்கிறது. தலைநகர் பெர்லினை தலைமையிடமாக கொண்டு வெளிவருகிறது.1980-களில் விற்பனை திடீரென சரிந்ததையடுத்து நிர்வாகிகள், ஆசிரியர்கள் கூடிப் பேசினர். ‘அட்டை படத்தில் தினமும் நிர்வாண படம் வெளியிடலாம்’ என்ற ஆலோசனை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 1984-ல் இது அமலுக்கு வந்தது.
பத்திரிகையை வாங்கியதுமே, ‘கவர்ச்சி’ படம் கண்ணுக்கு படுவது, வாசகர்களுக்கு பிடித்துவிட்டது போல.. விற்பனை விறுவிறு ஆனது. வாசகர்களின் ஏகோபித்த வரவேற்புக்கு முன்பு மகளிர் அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் எடுபடவில்லை.
‘எல்லாம் நல்லாத்தான போய்ட்டிருக்கு..’ என்று வாசகர்கள் கருதிக் கொண்டிருந்த சூழ்நிலையில், கடந்த 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பில்டு இதழின் ஆசிரியர் குழு கூட்டம் நடந்தது. இனிமேல், அட்டையில் அழகிகளின் நிர்வாண படத்தை வெளியிடுவதில்லை என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.
‘எல்லாம் நல்லாத்தான போய்ட்டிருக்கு..’ என்று வாசகர்கள் கருதிக் கொண்டிருந்த சூழ்நிலையில், கடந்த 8-ம் தேதி உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பில்டு இதழின் ஆசிரியர் குழு கூட்டம் நடந்தது. இனிமேல், அட்டையில் அழகிகளின் நிர்வாண படத்தை வெளியிடுவதில்லை என்று அதில் தீர்மானிக்கப்பட்டது.
‘நான்தான் பில்டு நாளிதழின் அட்டைப்பட கடைசி நிர்வாண அழகி’ என்ற தலைப்புடன் போலந்தை சேர்ந்த இவா என்ற அழகி தன் நிர்வாண அழகை மறைத்தபடி கொடுத்த போஸ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. பில்டு இதழின் இந்த முடிவு மகளிர் நலனுக்கான சிறிய முன்னேற்றம்.
பில்டு இதழ் மற்றும் ஆண்கள் நலனுக்கான மாபெரும் முன்னேற்றம் என்றும் கருதுகிறோம் என்று விளக்கம் அளித்தது ஆசிரியர் குழு. ‘ஆண்களைவிட பெண்களுக்கு மண்டையில் மசாலா கம்மி’ என்று பொருள்படும் வாசகம் ஒன்று பில்டு இதழின் 1970-ம் ஆண்டு மே மாத பதிப்பில் வெளிவந்தது. அதற்காகவும் வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.
28 ஆண்டு பாரம்பரியம் வாய்ந்த முதல்பக்க கவர்ச்சி படத்துக்கு ‘மங்களம்’ பாடப்பட்டிருப்பது வாசகர்கள் மத்தியில்.. பெரும் பரபரப்பையெல்லாம் ஏற்படுத்தவில்லை. அட்டைப் பக்கத்தில்தான் கிடையாதாம். உள்பக்கம் இடம்பெறுமாம்! ‘போங்கடா நீங்களும் உங்க பில்டப்பும்’ என்று பொங்குகின்றன மகளிர் அமைப்புகள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக