அரவாணிகளின் குருக்கள் என்று சொல்லப்படுகிறவர் கள், ஒருவருடைய பாலியல் உறுப்புகளை நீக்கும்படி ப ரிந்துரைப்பதை அல்லது அங்கீகாரம் வழங்குவதை அ னுமதிக்க முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றத்தி ல் மத்திய அரசு வாதிட்டது. அரவாணிகளின் நலனுக் காக பாடுபட்டு வரும் தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) ஒன்று மும்பை உயர்
நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,அரவாணிகளின் பாலிய ல் உறுப்புகளை அறுவை சிகிச்சைமூலம் நீக்குவதற்கு அவர்களுடைய குருக் கள் பரிந்துரைக்கும் வகையில் உரிய அத்தாட்சியை அரசு அவர்களுக்கு வழங் க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினத்தவருக்கான (எஸ்டி) சட்டங்கள் அரவாணிகளுக்கும் பொருந்த வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி மொகித் ஷா, நீதிபதி ஆர்.வி.மோரே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரூய் ரோட்ரிக்ஸ், பாலியல் உறுப்புகளை நீக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நபரை ஒரு டாக்டர், ஒரு மனோதத்துவ நிபுணர், ஒரு சிறுநீரக சிகிச்சை நிபுணர் ஆகியோர் முழுமையாக பரிசோதிக்க வேண்டும். அனுபவம் இல்லாத சாதாரண மனிதர் இந்த அறுவை சிகிச்சையை செய்ய முடியாது என்றார். மகாராஷ்டிரா அரசு சார்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் மட்டோஸ் ஆஜரானார். அரவாணிகளை எஸ்.சி., மற்றும் எஸ்.டி. பிரிவினராக கருத வேண்டும் என்ற கோரிக்கை பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், ஒரு குற்றம் நடக்கும் பட்சத்தில் சிறுபான்மை வகுப்பு அல்லது எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்த எந்தவொரு அரவாணியும் அது குறித்து புகார் செய்ய முடியும் என்றார். இதைத் தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் தங்களுடைய கருத்துக்களை வாக்குமூலமாக நான்கு வாரத்துக்குள் தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக