தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

5.3.11

சவூதியில் இஸ்லாமிய அரசியல் கட்சி?


சவூதியில் முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சியாக ஹிஸ்புல் உம்மா அல் இஸ்லாமிய்யா’ என்ற பெயரில் கட்சி யொன்றைப் பதிவுசெய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
இதன் வருகை சவூதியில் அரசியல் சுதந்திரத்தினை கோரி நிற்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இதுவரையும் நிலவி வருகின்ற மன்ன ராட்சி அல்லது சவூதியின் குடும்ப ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்பதனை இது குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
"மன்னர் குடும்பம் நாட்டினை ஆட்சி செய்வதனை எங்களால் நியாயம் காண முடியாது. இந்த விடயத்தினை
அரசியல் அதிகாரிகள், தகுதி வாய்ந்த அதிகாரி களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது"  என இக்கட்சியின் உருவாக்குனர்களில் ஒருவரான சட்டத்தரணி அப்துல் அஸீஸ் வஹாபி குறிப்பிட்டுள்ளார்.  சவூதி அரசு இக்கட்சியினை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப் பந்தத்திற்குள் இருக்கின்றது.
சவூதி அரசாங்கம்அரசியல் கட்சிகளினை மக்கள் உருவாக்குவதற்கான உரிமை உண்டுஅதனை அங்கீகரிப்பது என்பதுடனான சர்வதேச உடன்படிக் கையில் கைசாத்தும் இட்டுள்ளது என ஜனநாயகமனித உரிமைகள் செயற் பாட்டாளர் முஹம்மத் அல் கஹ்தானி குறிப்பிடுகின்றார். இதனால்சவூதி அரசு இக்கட்சியினை நிராகரிக்க முடியாத சூழலொன்று இருக்கின்றது. இக்கட்சியின் ஆரம்பம் எகிப்து மற்றும் தூனீசிய மாற்றத்தின் விளைவானதா என்ற கேள்வி வருகின்றபோதும், "இப்படியான அமைப்பு தோன்றுவதற்கான சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டிருந் தது" என அப்துல் அஸீஸ் வஹாபி குறிப்பிடுகின்றார்.
எனினும்எகிப்து போன்று ஓர் அரசியல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சவூதியில் நிகழுமா என்ற கேள்வி இருக்கின்றது. அண்மையில் இரண்டு சிறிய ஆர்ப்பாட் டங்களினை சவூதி சந்தித்துள்ளது. ஒன்று ஜித்தாவில் ஏற்பட்ட வெள்ளத்தின் எதிரொலியாக உட்கட்ட மைப்பு வசதியினை மேம்படுத்தவும்அதற்கு ஒதுக் கப்பட்ட நிதி மோசடிக்கும் எதிராக மக்கள் திரண்டிருந்தனர். அடுத்து உள் நாட்டு அமைச்சின் முன்னாள் தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட வர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்ட வர்களை விடு விக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம்.
நன்றி: மீல்பார்வை

0 கருத்துகள்: