எகிப்து அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம், நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
ஊழல், வேலை வாய்ப்பின்மை, பொருட்கள் விலையேற்றமென, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதனால் 30 ஆண்டுகாலமாக ஆட்சி நடத்தும் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும். அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என கோரி கடந்த நான்கு நாட்களாக ஆர்ப்பாட்ட காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
தற்போது அவர்களோடு நீதிபதிகளும், காவற்துறையினரும் இணைந்து கொண்டுள்ளனர். நேற்று தலைநகர் கெய்ரோவின் தஹ்ரிர் மையத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை ஒன்றையும் மக்கள் நடத்தினர்.
ஆளும் அரச வர்க்கத்திற்கு எதிரானவரும், விடுதலை கோரும் அமைப்பின் தலைவருமான முகம்மது எல் பரதேய்யும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துகொண்டுள்ளார். நோபல் பரிசு பெற்றவரான எல் பரதேய், இவ்வளவு காலமும் வியன்னாவில் தங்கியிருந்து, தற்போது கெய்ரோ திரும்பிய நிலையில் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டிருந்தார்.

அவரும் தற்போது அதிபர் முபாரக்கை பதவி விலக கோரி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர், சிறைகளை உடைத்து தப்பி ஓடினர். மேலும் கடைகள், வணிக நிறுவனங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டு வருவதால் கலவரத்தை அடக்குவதற்கு அரசு சார்பான இராணுவ தரப்பினர் பாரிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதனால் ஆர்ப்பாட்ட காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் சுமார் 150 க்கு மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக