தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.12.11

ஆப்கானை விட்டு வெளியேறும் நேட்டோ படைகள்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் படை வீரர்கள் 40 ஆயிரம் பேர் அடுத்தாண்டின் இறுதிக்குள் தங்கள் சொந்த நாடு திரும்புவர் என அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் பத்தாண்டுகளுக்கு முன் தலிபான்களுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரில் அமெரிக்கா தலைமையில் 49 நாடுகளின் கூட்டணிப் படைகள் ஈடுபட்டுள்ளன. 


இவற்றில் அமெரிக்கத் தரப்பில் மட்டும் ஒரு லட்சத்து ஆயிரம் பேர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கா தவிர ஐரோப்பிய யூனியன், அவுஸ்திரேலியா, ஜோர்டான், நியூசிலாந்து என பிற நாடுகளும் கணிசமான அளவில் வீரர்களை ஆப்கான் நாட்டில் வைத்துள்ளார்கள். 

2011ம் ஆண்டு முதல் ஆப்கானிலிருந்து நேட்டோ படைகள் படிப்படியாக தாய்நாடு திரும்பி கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் எதிர்வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 14 ஆயிரம் வீரர்கள் தங்கள் தாயகம் திரும்புகின்றனர். 

எதிர்வரும் 2012ம் ஆண்டு இறுதிக்குள் ஒட்டு மொத்தமாக 40 ஆயிரம் வீரர்கள் தாயகம் செல்கின்றனர். இவர்களில் 33 ஆயிரம் பேர் அமெரிக்க வீரர்கள். 

பிற நாடுகள் ஆப்கானில் இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெறுவதில் அவ்வளவு தீவிரம் காட்டவில்லை. ஆப்கான் படைகளுக்கு பயிற்சி அளிப்பதில் அவை ஆர்வம் காட்டி வருகின்றன.

எனினும் அன்னியப் படைகள் தாய்நாட்டுக்கு திரும்பி சென்ற பின் ஆப்கான் நாட்டின் நிலைமை என்னவாகும் என பல தரப்பிலும் அச்சம் எழுந்துள்ளது.

0 கருத்துகள்: