தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.11

ஈராக்கில் பாராளுமன்றம் முன்பு தற்கொலைப்படை தாக்குதல்; பாராளுமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

பாக்தாத், நவ. 30-  ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் நாள்தோறும் குண்டுகளை வெடித்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தலைநகர் பாக்தாத் சுற்றியுள்ள பகுதிகளில் கார்களில் வந்து தற்கொலைப்படை தீவிரவாதிகள் பல இடங்களில் குண்டுகளை வெடித்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம்
அடைந்தனர்.
இதில் ஒரு தாக்குதல் சம்பவம் பாக்தாத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தாஜூ என்ற சிறைச்சாலை அருகில் நடந்தது. அங்கு கைதிகளை சந்திப்பதற்காக உறவினர்கள் காத்திருந்தனர். அப்போது காரில் இருந்த குண்டுகள் வெடித்தன. அங்கு ஒரே இடத்தில் 13 பேர் பலியானார்கள். மேலும் 26 பேர் காயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த சிறிது நேரத்தில் பாக்தாத் நகரில் பாராளுமன்ற கட்டிடம் அருகில் 2 இடங்களில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன. இதில் 4 பேர் இறந்தனர். அலி அல்-ஷிலா என்ற பாராளுமன்ற உறுப்பினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருடன் சென்ற நண்பர் பலியாகி விட்டார். மேலும் 14 பேர் காயம் அடைந்தார்கள். பாராளுமன்றம் அருகிலேயே நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு சபாநாயகர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

0 கருத்துகள்: