தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.11.11

ஆனர்ஸ் பிறீவிற்க்கிற்கு முன்மாதிரி இன்னொரு உளவியல் கொலையாளி

நோர்வேயில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் சந்தேக நபரான ஆனர்ஸ் பிறீவிக்கின் செயற்பாடுகளுக்கு உந்துதலாக அமைந்த உளவியல் காரணங்கள் நேற்று 249 பக்க அறிக்கையாக வெளிவந்தது தெரிந்ததே. இது தொடர்பான இன்னொரு தகவல் இன்று வெளியாகியுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு நோர்வேயின் ரோன்ட்கெய்ம் பகுதியில் சோமாலியர் ஒருவர் கொலை
செய்யப்பட்டது தெரிந்ததே.இந்த நபரை இனவாதத் தாக்குதலைச் செய்து கொன்ற நோர்வேஜிய கொலையாளி 2009 ல் ஓர் உளவியல் நோயாளி என்று கணிக்கப்பட்டு தண்டனையில் இருந்து வசதியாக தப்பித்துக் கொண்டார். இவர் ஓர் உளவியல் நோயாளி என்ற கோணத்தில் வழக்கு நடாத்தப்பட்டது. ஆனால் இந்த நபர் ஆழமான இன, நிற துவேஷ அணிகளுடன் தொடர்பு கொண்ட கடும்போக்குவாதியாகும். இவருக்குப் பின்னால் இயங்கிய அடிப்படைவாதிகள் பற்றிய தகவல்கள் அப்படியே மூடி மறைக்கப்பட்டன. இந்த நபர் சென்ற பாதையில் சென்றால் துவேஷ அணிகளின் பாராட்டைப் பெறலாம், தண்டனையும் கிட்டாது, உழைக்காமலே உளவியல் வேடமணிந்து வாழ்வையும் முடிக்கலாம். இதே பின்னணியையே ஆனர்ஸ் பிறீவிக்கும் கடைப்பிடித்துள்ளார் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனர்ஸ் பிறீவிக் எழுதிய பேஸ்புக் தகவல்களில் டென்மார்க் உட்பட ஐரோப்பாவின் பல நாடுகளில் துவேஷம் பேசும் கட்சிகள், நபர்கள் பற்றி எழுதியுள்ளார். இவர்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளாமலே உளவியலுக்குள் நோர்வேயின் சட்டவிவகாரம் பயணிக்கவுள்ளதை அறிய முடிகிறது. இவர்குறித்த விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், மந்த நிலை கடைப்பிடிக்கப்பட்டதாகவும் குறை கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து விவகாரத்திற்கு பொறுப்பான நீதி அமைச்சர் பதவி விலகியதும் தெரிந்ததே.

0 கருத்துகள்: