தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.11

முல்லை பெரியாறு அணையை இடிக்க கோரி கேரளாவில் முழு நாள் கடை அடைப்பு & உண்ணாவிரத போராட்டம்


முல்லை பெரியாறு அணையை இடிக்கவேண்டும் எனவும், புதிய அணை  கட்டப்பட வேண்டும் எனவும் கோரி, கேரளாவின் இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம்திட்டா, ஆகிய மாவட்டங்களில் நேற்று காலை முதல் மாலை வரை முதல் முழு அடைப்பு போராட்டம்  நடைபெற்றுள்ளது.ஆளும் காங்கிரஸ் கூட்டணி மற்றும்இடதுசாரிகள் என்பனவற்றின் ஆதரவுடன்நடைபெற்றுள்ள இப்போராட்டத்தின் போது 
இடுக்கி, வண்டிப்பெரியார், குமுளி, சப்பாத்து ஆகிய இடங்களில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, மதிமுக பொதுச்செயலர் வைகோ ஆகியோரின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டுள்ளன.


திருவனந்தபுரத்தில் உள்ள பாதுகாப்பு துறை அமைச்சர், ஏ.கே.அந்தோனியின் வீட்டை தாக்க முற்படும் பாரதிய ஜனதா இளைஞர் அமைப்பின் போராட்ட காரர்கள்  பல இடங்களில் இடதுசாரி கட்சியினர் திரண்டு, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் உம்மன் சாண்டி, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி, வயலார் ரவி ஆகியோரைக் கண்டித்து கோஷம் எழுப்பியுள்ளனர்.

கேரளாவுக்கு சாதகமாக மத்திய அரசை திருப்ப இவர்கள் தவறி விட்டதாக அப்போது இவர்கள் கோஷமிட்டுள்ளனர். இந்நிலையில் தேக்கடி அருகே, ஒரு தரப்பினரால், தமிழகத்திலிருந்து வந்த வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இதே போன்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸ் கே.மணி, இடுக்கி எம்.எல்.ஏ. ரோஸி அகஸ்டின் ஆகியோர் இக்கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டமும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், முல்லை பெரியாறு அணை உடைக்க முயற்சி செய்து வரும் கேரளாவின் சதி திட்டத்தை முறியடிக்க வேண்டுமென பழ.நெடுமாறன், வைகோ போன்ற தமிழக அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் கேரள அரசின் சதியை முறியடிக்க தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கொண்ட குழுவை அமைத்து பிரதமரிடம் நியாயங்களை எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் விரைந்து செயல்பட தமிழக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்களை ஆத்திரமூட்ட கேரளம் சதித்திட்டம் தீட்டி வருவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, மேற்கொள்ளப்பட்ட உருவ பொம்மை எரிப்பு என்பவற்றை கண்டித்து, தமிழக மக்கள் ஆத்திர உணர்ச்சிக்கு இடம் கொடுத்து விட கூடாது. எம்மை ஆத்திரமூட்டுவது தான் தற்போது அவர்களின் திட்டம்.

பதிலுக்கு உருவ பொம்மை எரித்தலோ, பேருந்துகளுக்குச் சேதம் விளைவிப்பது போன்ற எந்தச் செயலிலும் தமிழக மக்கள் ஈடுபட வேண்டாம்.

முல்லைப் பெரியாறு அணையையும், தமிழகத்தின் உரிமையையும் காக்க, நாம் ஏற்கனவே திட்டமிட்டுள்ளவாறு, கேரளத்துக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற பொருளாதார முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: