தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.11

மொரோக்கோ தேர்தலில் இஸ்லாமிய நீதிக்கட்சி பெரும் வெற்றி.

மொரோக்கோ பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய நீதி மற்றும் அபிவிருத்தி கட்சி (பி.ஜெ.டி) வெற்றி பெற்றுள்ளது.  இத் தேர்தலில் 395 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி கட்சி 80 ஆசனங்களை வென்றெடுத்துள்ளது. இதன் மூலம் அரசாங்கத்தை தலைமை தாங்கி நடத்தும் உரிமையை "பி.ஜெ.டி' கட்சி பெற்றுள்ளது.
தேர்தல் வெற்றியையடுத்து ஆதரவாளர்கள் மத்தியில்

உரையாற்றிய "பி.ஜெ.டி'கட்சியின் தலைவர் அப்டெலிலாஹ் பென்கிரேன் தமது கட்சிக்கு வாக்களித்த மொரோக்கோ மக்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

மொக்ரோக்கோவின் தற்போதைய பிரதமர் அப்பாஸ் அல் பாஸி, தனது தேசியவாத இஸ்திக்லால் கட்சி "பி.ஜெ.டி'கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட தயாராக உள்ளதாக கூறினார்.  

0 கருத்துகள்: