கொல்லப்பட்டதற்கு நேட்டோ படை தலைவர் தெரிவித்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது.
கடந்த வார இறுதியில் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது, ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகாப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 24 பாகிஸ்தான்
வீரர்கள் பலியாயினர்.இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள்,இராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாகிஸ்தான் அடைத்து விட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையின் கூட்டத்தை அவசரமாக கூட்டிய பிரதமர் யூசுப் ரசூல் கிலானி, தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,பாகிஸ்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தை தொடர்ந்து, பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டது.
பாகிஸ்தானின் இந்த கடுமையான பதிலடியை தொடர்ந்து, நேட்டோ படை பொதுச் செயலர் ஆண்டர்ஸ் ஃபாக், பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார்.
ஆனால் நேட்டோ படையின் இந்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது.பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு வெறும் வருத்தம் போதுமானதல்ல என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார்.
நேட்டோ நடத்திய தாக்குதல் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக