தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.11

ரஷ்ய தேர்தலில் மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது


மாஸ்கோ, 28 நவம்பர்- ரஷ்யாவில் எதிர்வரும் தேர்தலில் மேற்கத்திய நாடுகள் தலையிடக்கூடாது என அந்நாட்டுப் பிரதமர் வ்லாடிமிர் புடின் தெரிவித்தார்.
அடுத்த மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், மீண்டும் அந்நாட்டின் அதிபர் தேர்வுக்கான வேட்பாளராக களமிறங்க இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ரஷ்யாவின் தேர்தல் முடிவு குறித்த எந்த மேற்கத்திய
நாடுகளும்எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. அவ்வாறான எதிர்ப்புகளால் எந்தவிதபயனும் இல்லை என்றார் அவர்.
அரசாங்க சார்பற்ற சில நிறுவனங்கள் மூலம் அந்நிய நாடுகள் சில பணம் கொடுத்து ரஷ்ய தேர்தல் பிரச்சாரத்தை ஊடுருவி திசைத் திருப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் வ்லாடிமிர் புடின் யுனைடட் ரஷ்யா கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொண்டப்பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

0 கருத்துகள்: