தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.11

முபாரக்கின் ஆட்சிக்கு பின்னர், எகிப்தில் நடைபெறும் முதல் ஜனநாயக தேர்தல் : இன்று தொடக்கம்


முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்ட பின்னர்எகிப்தில் முதன்முறையாக ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியுள்ளது.இத்தேர்தல் கட்டம் கட்டமாக
எதிர்வரும் 2012 ஜனவரி மாதம் வரை தொடரவுள்ளது. பொருளாதார, வணிக மற்றும் சமூக
ரீதியில் நாங்கள் வெற்றி பெற முயல்வோம். இல்லையெனில் அதன் விளைவுகள் தீவிரமாக இருக்கும். அதை அனுமதிக்க மாட்டோம் என தற்போதைய எகிப்து ஆட்சி அதிகாரத்தை கொண்ட இராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஹுசேன் தண்டாவி தெரிவித்துள்ளார்.

மேலும் தான் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கும் கமல் கன்சூரிக்கு, ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிலும், மொஹ்மட் எல்பரடேய், மற்றும் ஏ.ம்.ஆர் மூஸா ஆகியோர் ஆதரவு தரவேண்டும் எனவும் அவர் அழுத்தம் பிரயோகித்துள்ளார்.

சுமார் 508 உறுப்பினர்கள் கொண்ட கீழ்சபைக்காகவும், 270 உறுப்பினர்கள் கொண்ட மேல் சபை (சௌரா கவுன்சில்)க்காகவும், 40 அரசியயல் கட்சிகளை சேர்ந்த 10,000 ற்கு மேற்பட்டவர்கள் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 2012ம் ஆண்டின் இடைக்காலப்பகுதியில் நடத்தப்படவிருக்கின்றன.

முதன் முறையாக எமக்கு சுதந்திரமாக வாக்களிக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என இன்றைய வாக்குப்பதிவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் தலைநகர் கெய்ரோவில் ஆர்ப்பாட்டக்கார்கள் தமது போராட்டத்தை இன்னமும் தொடர்ந்து வருகின்றனர். இராணுவத்திடமிருந்து ஆட்சி அதிகாரம் அனைத்தும் முற்றாக கையளிக்கப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த வேண்டும். அதுவரை அதை இடைநிறுத்தி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிவருகின்றனர்.

0 கருத்துகள்: