அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் உலகம் முழுதும் ஏற்படும் நில நடுக்கங்களை கண்காணித்து வருகின்றது.உங்கள் பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிட நேரங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியை ஏற்படுத்தி இருக்கின்றது அமெரிக்க புவியியல் ஆய்வு இணையத்தளம்.மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கும் இவ்வசதியை செயற்படுத்துவதற்கு,
https://sslearthquake.usgs.gov/ens/ என்ற முகவரிக்குச் சென்று Subcribe செய்த பின்னர் சாம்பிள் மின்னஞ்சல் வந்து சேரும்.
அந்த மின்னஞ்சலில் உள்ள இணைப்பில் சென்று தளத்தில் தெரியும் கூகிளின் வரைபடத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியை வரைந்த பின்னர் சேமித்து விடவும்.
இனிமேல் பூகம்ப எச்சரிக்கை உங்கள் மின்னஞ்சலில் வந்து சேரும்.
குறிப்பு - அமெரிக்காவில் ஏற்படும் பூகம்ப தகவல்கள் 2 முதல் 8 நிமிடங்களில் கிடைத்துவிடும்.
ஆனால் ஏனைய பகுதிகளுக்கானவை 20 நிமிடங்கள் வரை ஆகலாம் என தெரிவிக்கின்றது இந்த தளம்.
இணைப்பு - https://sslearthquake.usgs.gov/ens/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக