ஸ்பெக்டரம் 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுகவின் உறுப்பினர் கனிமொழிக்கு தில்லி உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.இந்த ஜாமீன் உத்தரவு மூலம், கடந்த ஆறுமாதகாலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கனிமொழி அங்கிருந்து விடுதலையாகின்றார்.இந்த வழக்கில்கடந்த பிப்ரவரி மாதம் 2-ந்தேதி முன்னாள் மத்தியஅமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதைத்
தொடர்ந்துமுடுக்கிவிடப்பட்ட சிபிஐ விசாரணைகளினால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனத்திடம் இருந்து ஆதாயம் அடைந்ததாக கலைஞர் டி.வி. பங்குதாரர்கள் கனிமொழி எம்.பி., சரத்குமார் ஆகியோர் மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்துமுடுக்கிவிடப்பட்ட சிபிஐ விசாரணைகளினால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற நிறுவனத்திடம் இருந்து ஆதாயம் அடைந்ததாக கலைஞர் டி.வி. பங்குதாரர்கள் கனிமொழி எம்.பி., சரத்குமார் ஆகியோர் மே மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் இவர்களுடன், மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் கோரிய கனிமொழி, சரத்குமார் உள்ளிட்டோரின் மனுக்கள் 4 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. 5-வது முறையாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி, சரத்குமார், முன்னாள் தொலை தொடர்புதுறை செயலாளர் சித்தார்த் பெகுரா, சினிமா பட தயாரிப்பாளர் கரீம் மொரானி, குசேகான் நிறுவன இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் ஜாமீன் மனுதாக்கல் செய்த நிலையில், அது தொடர்பான விசாரணை டிசம்பர் 1-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், 5 தனியார் நிறுவன அதிகாரிகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியமை, இந்த வழக்கில் கைதான ஏனையவர்களுக்கும் ஜாமீன் கிடைக்க வகை செய்யவே, கனிமொழி உள்பட 6 பேரும் டெல்லி ஐகோர்ட்டில் தங்கள் மனுக்களை குறித்த திகதிக்கு முன்னதாகவே வாசிக்க வேண்டும் எனப் புதிதாக மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை, கடந்த 25ந் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் இன்றைய திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி வி.கே.ஷாலி முன்னிலையில் இன்று விசாரணைகள் நடைபெற்றதன் பின், நீதிபதி கனிமொழிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவருடன் மனுத்தாக்கல் செய்த ஐந்து பேரில், 4 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக