தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.11

தமிழ்நாட்டில் பருவமழை: மிதக்கும் குடியிருப்புகள்


சென்னை, நவம்பர் 28- காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த வியாழக்கிழமை முதல் தமிழ்நாட்டில் பருவமழை
தீவிரமடைந்து வருகிறது.
இதனால் சென்னையில் வியாசர்பாடி,கொட்டிவாக்கம், புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை. மேலும் வட சென்னையில் குளம் போல மாறியுள்ள சாலைகளால் வாகனமோட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி  வருகின்றனர்.
இதனிடையே தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்களுக்கு  பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

0 கருத்துகள்: