தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.11

பதினைந்து நாட்களில் ராணுவம் வெளியேறனும் அமெரிக்காவுக்கு பாக் உத்தரவு


பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் மீது, ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகாப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 25 பாகிஸ்தான் வீரர்கள்
பலியாயினர்.
இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பொருட்கள்,இராணுவ தளவாடங்களை கொண்டு செல்லும் பாதைகளை பாகிஸ்தான் அடைத்து விட்டது.
இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சரவையின் கூட்டம் அவசரமாக நேற்றிரவு நடைபெற்றது.
பிரதமர் யூசுப் ரசூல் கிலானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில்,பாகிஸ்தான் மீதான நேட்டோ படையினரின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தை தொடர்ந்து, பலுசிஸ்தானில் உள்ள தனது விமானப்படை தளத்திலிருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது

0 கருத்துகள்: