தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.11.11

ராம் லீலா மைதானத்தை மீண்டும் முன்பதிவு செய்துள்ள அன்னா ஹசாரே : அடுத்த நாடகமா?


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வலுவான லோக்பால் மசோதாதாக்கல் செய்யப்படாவிடின் டிசம்பர் 22ம் திகதி முதல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பேன் என அன்னா ஹசாரே முன்னர் எச்சரித்திருந்தார்.இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள போதும், இன்னமும்,
ஹசாரே குழுவினருக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிநிறைவேற்றப்படாததால் எதிர்வரும் டிசெம்பர் 27ம் திகதி முதல் ஹசாரே பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க போகிறார் என ஹசாரே குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்தும் முகமாக, டிசம்பர் 27ம் திகதி முதல் ஜனவரி 5ம் திகதி வரை டெல்லி ராம்லீலா மைதானத்தை ஹசாரே முன்பதிவு செய்துள்ளதாக டெல்லி மாநராட்சி மையம் தெரிவித்துள்ளது. எனினும் இது உண்ணாவிரத போராட்டமாக முன்னெடுக்கப்படுமா என உறுதிப்படுத்தப்படவில்லை. 

0 கருத்துகள்: