பாதிக்கப்பட்ட பெண்கள் |
நம்பிக்கை இல்லை, மத்தியபுலனாய்வுத் துறை, சிபிஐயின் விசாரணை வேண்டும் எனக்கோரி பொதுநலவழக்கொன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அது நாளை விசாரணைக்கு வரவிருக்கிறது.
போலீசாரால் பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறும் 20 வயதான லட்சுமி என்ற பெண், தன் கணவர் காசியை கடந்த நவம்பர் 22 அன்று ஒரு திருட்டு சம்பவம் குறித்து விசாரிக்க போலீசார் முதலில் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் குடிசையை சோதனையிடுவதற்காக வந்தவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்துச் சென்றதாகவும், காட்டுப் பகுதியில் லட்சுமி, மற்றும் அவர்களது குடும்ப்ப் பெண்கள் மூவரை, நான்கு காவலர்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்தியதாகவும், எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட்த்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக்கோரி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் மனுச் செய்திருக்கிறார்.
''ஆள் கடத்தல், வன்புணர்ச்சி, காயம் ஏற்படுத்துதல், திருட்டு” உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டு நீதித்துறை நடுவர் விசாரணைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கண்காளிப்பாளரிடம் மனு அளிக்கச் சென்றபோது, லட்சுமியையும் மற்றவர்களையும் இரவெல்லாம் போலீசார் விசாரித்த்தாகவும், மிரட்டியதாக்வும், ஆனால் அவர்களை மருத்துவபரிசோத்னைக்கு அனுப்பவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு கூறுகிறது.
இந்நிலையிலேயே சிபிஐ விசாரணை கோரப்பட்டிருக்கிறது.
சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்தின் தொகுதியான் ரிஷிவந்தியத்தில் சம்பவம் நடந்திருப்பதன் பின்னணியில், நடிகர் விஜயகாந்த் போலீசாரின் நட்த்தைக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
அவரது தேசிய முற்போக்கு திராவிடர் கழக நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
மறு மலர்ச்சி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, கண்துடைப்புக்காக காவல் துறையினர் மீது வெறும் வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறைகூறி, இக்குற்றத்தை செய்த காவல் துறையினரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக