இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கடுமையாக பேசியுள்ளார். அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கம் ஆரம்பித்து அதைக் கட்சியாக தற்போது மாற்றி செயல்பட்டு வருகிறார் இயக்குநர்சீமான். தமிழ் ஆர்வலர்கள்
மத்தியில் இந்த இயக்கத்திற்கு நல்ல பெயரும், நல்ல ஆதரவும் காணப்படுகிறது. ஆனால் அதற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் கடலூரில் நடந்த மாவீரர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இடம் பெற்ற சீமானின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சுப்புராய ரெட்டியார் திருமண மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்தது காவல்துறை.
அப்போது சீமான் பேசுகையில், சீமான் ஒரு நாள் சட்டமன்றத்துக்குள் போவான். பிரபாகரன் படம் இருக்கும் சட்டையுடன் போவேன். சட்டயை கழட்டச் சொன்னால் சட்டையை கழட்டுவேன். உள்ளே உடம்பில் பச்சை குத்தியிருப்பேன். அப்ப வெளியே போகச் சொல்ல முடியுமா?
இந்த தமிழ்நாட்டில் தமிழர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் யாரும் இல்லை. நாம் தமிழர் கட்சியில் இல்லாதவர்கள் நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்தவன் அல்ல என்றார்.
இதைக் கேட்டதும் கூட்டத்திற்கு வந்திருந்த பலரும் முகம் சுளித்தனர். சீமான் பேச்சில் இடம் பெற்ற வார்த்தைகள் மிகக் கடுமையானவை என்று அவர்கள் அதிருப்தியுடன் வெளியேறியதைக் காண முடிந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக