ஏமனில் 33 ஆண்டு காலம் அதிபராக இருந்து வந்த அலி அப்துல்லா சாலேவுக்கு எதிராக கடந்த 10 மாதங்களாக நடந்த புரட்சியால் பதவியை விட்டு விலகினார். அரேபிய மன்னர் அப்துல்லா செய்த சமரச முயற்சியால், ஆட்சி அதிகாரத்தை துணை அதிபர் அப்ரபு மன்சூர் ஹாதியிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் சாலே கையெழுத்திட்டார்.
அதன்படி, 90 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.இதையடுத்து, "2012-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெறும்" என துணை அதிபர் ஹாதி நேற்று அறிவித்தார். ஏமன் நாட்டின் முக்கியமான தருணம் என்பதால் இந்த தேர்தலிலும் அடுத்து வரும் மாதங்களிலும் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக