தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

16.8.11

ராகு காலம் பார்க்கும் இம்சை அரசி செல்வி 24-ஆம் புலிகேசி !


65வது சுதந்திர தின விழா நாளை கொண் டாடப்படுகிறது. சுதந்திர மற்றும் குடியரசு தினத்தில் காலை 8 மணி முதல் 8.30 மணிக்குள் அரசு அலுவலகம், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றப்படும். ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்படும் என ஜெயா அரசு திடீரென அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை 7.30 மணி முதல் 9 மணி வரை ராகு காலம் என்பதால், கொடியேற்றும் நேரம் மாற்றப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.

அதிமுக அரசு பொறுப்பேற்று முதல் சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனால் ராகு காலத்தில் கொடியேற்றாமல், நல்ல நேரத்தில் கொடியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்ற னர்.

முன்னதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பிய அழைப்பிதழில் 15ம் தேதி காலை 8.30 மணிக்கு சுதந்திர தின விழாவில் கலெக்டர் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அழைப்பிதழ்கள் தற் போது திரும்ப பெறப்பட்டு, 15ம் தேதி 9.30 மணிக்கு சுதந்திர தின விழாக்கள் நடைபெறும் என புதிய அழைப்பிதழ் அரசு அலு வலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

** கொடியேற்ற நேரம் பார்க்கும் இவாளால் நாடு எங்கே உருப்படபோகிறது.? ** அடுத்தவருடம் ஆகஸ்ட்15 நல்லநாள் இல்லைஎன்றால் ஆகஸ்ட் 16 கொடியேற்றுவாளோ இவாலல்லாம் செய்தாலும் செய்வால் நாம என்னடா அம்பி செய்றது லோக கடவுள் தான் நல்லபுத்தி கொடுக்கனும்.

0 கருத்துகள்: