ஒசாமா பின்லாடனை கொல்லும் திட்டத்துடன் அமெரிக்க கொமாண்டோ படையினர்
பாகிஸ்தான் அபோத்பாத் அரண்மனை வளாகத்திற்குள் நுழைந்த போது அமெரிக்க ஸ்டெல்த் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
அமெரிக்க படைகள் இரகசியமாக தமது தாக்குதலை முடித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிய போதும், இவ்விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் எச்சங்கள் அங்கு மிதமிருந்தன.
இவற்றை பார்வையிடுவதற்கு பாகிஸ்தான் இராணுவம் சீனாவுக்கு விசேட அனுமதி அளித்ததாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளதால் அமெரிக்கா கடும் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது அமெரிக்க - பாகிஸ்தான் உறவையும் கடுமையாக பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ சீன இராணுவத்தினருக்கு இந்த ஹெலிகாப்டரை பார்வையிட அனுமதி அளித்ததாகவும், சீன அதிகாரிகள் இதனை படம்பிடித்து, ராடாரிலிருந்து தப்பிக்கும் உக்தி கொண்ட அவ்விமானம் தயாரிக்கப்பட்டிருக்கும் உலோகம், விதம் என்பவற்றின் சாம்பிள்களை எடுத்துசெல்ல உதவியதாகவும் அத்தகவல்கள் தெரிவிகின்றன.
எனினும் இதை பாகிஸ்தான் இராணுவ உயரதிகாரி அஷ்ஃபாக் கயனி மறுத்துள்ளார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக