சென்னை, ஜன.24 மேலவை தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தயார் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார். நாளைய தினம் (ஜன.25) தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பேட்டியின்போது அவர் கூறியதாவது, தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க புதிய விதிமுறைகள் இன்னும் 15 நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 18 வயது பூர்த்தி அடைந்த இளைஞர்களில் 23 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை. அவர்களைவாக்காளர் பட்டியலில் இடம் பெறச் செய்யவும், தேர்தலில் பங்கு பெற்று தங்கள் ஜனநாயக கடமையை நிறை வேற்றவும் இந்த வாக்காளர் தினத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தப் போகிறோம்.
அத்துடன் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டியதின் அவசியத்தையும் அவர்களுக்கு வலியுறுத்தப்படும். எந்தவித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாகாமல் மக்கள் தங்கள் மனச்சாட்டிப்படி வாக்களிக்க வேண்டும். நடந்து முடிந்த பீகார் தேர்தலில் புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் அமுல்படுத்தியது. அதில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதிய விதிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் உருவாக்கி வருகிறது.
இன்னும் 15 நாளில் அந்த விதி முறைகள் அறிவிக்கப்படும். இந்த புதிய விதிமுறைகளின்படி தமிழகம், பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டசபைதேர்தல் நடைபெறும். இந்த புதிய விதிமுறைகள் மூலம் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கப்படும்.
மிகவும் பதட்டத்திற்குரிய பகுதிகளில் வெப்கேமிரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு பதிவு செய்யப்படுகிறது. தேர்தல் கமிஷன் அதனை கண்காணிக்கும். எல்லா இடங்களுக்கும் இத்தகைய ஏற்பாடுகளை செய்ய இயலாது. ஆனால் வீடியோ கேமிரா மூலம் வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்படும்.
கடந்த முறை நடைபெற்ற தேர்தலின் போது 6000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் பெரும்பாலும் சுவர்களில் அனுமதியின்றி தேர்தல் வாசகங்களை எழுதிய புகார்களாகும். தற்போது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டாலும் வாக்காளர்களை சேர்க்க இன்னும் அவகாசம் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்பு மனுவை விலக்கிக்கொள்வதற்கு 10 நாள் முன்பு வரை கூட வாக்காளர்களை சேர்க்க முடியும்.
மேலவை தேர்தலை நடத்துவதற்கு அனைத்தை ஏற்பாடுகளும் தயார். வாக்குச்சாவடிகளும் தயார் செய்யப் பட்டுள்ளன. தேர்தல் அலுவலர்க ளுக்கு முதல் கட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் கமிஷன் எப்போது தேதியை அறிவிக்கிறதோ அப்போது தேர்தல் நடத்த நாங்கள் தயார். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இந்த இடுகை(post)தங்களை கவர்ந்திருந்தால் கீழே உள்ள இன் ட்லியில் ஒரு ஓட்டு போட்டுவிட்டு செல்லுங்களேன்.நன்றி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக