தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.11.11

தமிழ்நாடு பஸ் கட்டண உயர்வு: கட்டண விவரங்கள்!


தமிழ்நாட்டில் பஸ் கட்டண உயர்வு நேற்று முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. சென்னையில் இருந்து திருச்சிக்கு ரூ.235-ம், மதுரைக்கு ரூ.325-ம், நெல்லைக்கு ரூ.440-ம், கோவைக்கு ரூ.395-ம், தஞ்சாவூருக்கு ரூ.280-ம் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி கொடுக்காததால், மரணப்படுக்கையில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை
காப்பாற்ற வேறு வழி இல்லாமல் பஸ் கட்டணம், பால் விலை உயர்த்தப்படுவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, பஸ் கட்டண உயர்வுக்கான அரசாணை நேற்று பிறப்பிக்கப்பட்டது. அதில், பஸ் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக டவுன் பஸ்களைப் பொறுத்தவரை 'ஸ்டேஜ்' அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு ஸ்டேஜ் என்பது சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தைக் குறிக்கும். அந்த அடிப்படையில் பார்த்தால், பஸ் புறப்படும் இடத்தில் இருந்து 2-வது கிலோ மீட்டர் தூரம் முதல் ஸ்டேஜ் என்று கணக்கிடப்படுகிறது. முதல் ஸ்டேஜ்-க்கான பழைய கட்டணம் ரூ.2. தற்போதைய புதிய கட்டணம் ரூ.3. அதிகபட்சமாக 28-வது ஸ்டேஜ்-க்கான பழைய கட்டணம் ரூ.12. புதிய கட்டணம் ரூ.14.
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் எல்.எஸ்.எஸ். பஸ்கள், பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் ஆகிய பஸ்களில் மேற்கண்ட சாதாரண பஸ் கட்டணத்துடன் ஒரு டிக்கெட்டுக்கு 50 பைசா கூடுதலாக வசூலிக்கப்படும். எக்ஸ்பிரஸ் பஸ்களில், சாதாரண பஸ் கட்டணத்தைவிட 1 1/2 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். இரவுநேர பஸ்களுக்கான கட்டணம் சாதாரண கட்டணத்தைவிட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
டீலக்ஸ் பஸ்களுக்கான கட்டணம், எல்.எஸ்.எஸ். பஸ் கட்டணத்தைவிட இரண்டு மடங்கு அதிகம். உதாரணத்திற்கு எல்.எஸ்.எஸ்.பஸ் கட்டணம் ரூ.4 என்று வைத்துக்கொண்டால், டீலக்ஸ் பஸ்சின் கட்டணம் 8 ரூபாயாக இருக்கும்.
வால்வோ ஏ.சி. பஸ்களின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.75 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த வால்வோ பஸ்களில் பாஸ் வைத்திருப்பவர்கள் பயணம் செய்ய முடியாது. டிக்கெட் எடுத்து செல்பவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சென்னையில் ஒரேயொரு முறை டிக்கெட் எடுத்து நாள் முழுவதும் (இரவு 10 மணி வரை) ஏ.சி.பஸ் தவிர மற்ற அனைத்து பஸ்களிலும், எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கிக்கொள்வதற்கான டிக்கெட் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. வாராந்திர பாஸ்சுக்கான கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
மாதாந்திர பாஸ்சுக்கான கட்டணத்தை ரூ.600-ல் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மட்டும் போய் வருவதற்கான மாதாந்திர சீசன் டிக்கெட் குறைந்தபட்ச கட்டணம் ரூ.140-ல் இருந்து ரூ.240 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.300-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்ந்துள்ளது.
சென்னை நீங்கலாக பிற நகரங்களில் இயக்கப்படும் டவுன் பஸ்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் (முதல் ஸ்டேஜ்) 3 ரூபாயாகவும், அதிகபட்ச கட்டணம் (20-வது ஸ்டேஜ்) 12 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்லும் எல்.எஸ்.எஸ். பஸ்கள், பாயிண்ட் டூ பாயிண்ட் பஸ்கள் ஆகிய பஸ்களில் மேற்கண்ட சாதாரண பஸ் கட்டணத்துடன் ஒரு டிக்கெட்டுக்கு 50 பைசா கூடுதலாக வசூலிக்கப்படும். எக்ஸ்பிரஸ் பஸ்களில், சாதாரண பஸ் கட்டணத்தைவிட 1 1/2 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும்.
இரவுநேர பஸ்களுக்கான கட்டணம் சாதாரண கட்டணத்தைவிட இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டு உள்ளது. டீலக்ஸ் பஸ்களுக்கான கட்டணம், எல்.எஸ்.எஸ். பஸ் கட்டணத்தைவிட இரண்டு மடங்கு அதிகம்.
மலைப்பகுதிகளில் ஓடும் டவுன் பஸ்களுக்கான புதிய கட்டணம், தரைப்பகுதியில் ஓடும் எல்.எஸ்.எஸ். பஸ்களின் கட்டணத்திற்கு சமமானதாக இருக்கும். தரைப்பகுதியில் ஓடும் சாதாரண பஸ்களின் கட்டணம், ஒரு கிலோ மீட்டருக்கு 47 பைசா வீதம் கணக்கிடப்படுகிறது.
அதன்படி பார்த்தால், குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டருக்கான கட்டணம் 5 ரூபாய்க்கு மிகாமல் இருக்கும். இதேபோல், மலைப்பகுதியில் இயங்கும் சாதாரண பஸ்களின் கட்டணம், குறைந்தபட்சம் 6 கிலோ மீட்டருக்கான கட்டணம் 4 ரூபாய்க்கு அதிகமாக இருக்காது என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கட்டண உயர்வு பற்றி அரசு பஸ்களின் கண்டக்டர்களுக்கு நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்தனர். அதையடுத்து நேற்றுமுதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டண உயர்வு காரணமாக எந்திரம் மூலம் டிக்கெட் கொடுப்பதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. கையால் கிழித்துக் கொடுக்கும் டிக்கெட்டில்தான் புதிய கட்டணத்திற்கு ஏற்ப சில டிக்கெட்டுகளை கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய கட்டணம் உடனடியாக அமலுக்கு வந்ததால் அதிர்ச்சியடைந்ததாக சில பயணிகள் கூறினார்கள். உடனடி அமலுக்கு வருவதை தெரிவித்திருந்தால் அதற்கேற்ப பணத்தை எடுத்து வந்திருப்போம் என்று சிலர் தெரிவித்தார்கள்.
அரசு பஸ்களில், சாதாரண பஸ், எல்.எஸ்.எஸ்., பாயிண்ட் டூ பாயிண்ட், டீலக்ஸ் போன்ற பல பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ்சில் உள்ள போர்டுகளைப் பார்த்துத்தான் இவற்றை தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.
எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் பார்த்தவுடன் தெரிந்து கொள்ள வசதியாக மேற்கண்ட பஸ்களுக்கு தனித்தனியான நிறங்களில் இயக்கினால் வசதியாக இருக்கும் என்று பயணிகள் யோசனை தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்லும் அரசு பஸ்களின் புதிய கட்டண விவரம் வருமாறு- (பழைய கட்டணம் அடைப்புக் குறிக்குள்):-
சென்னை - மதுரை - ரூ.325 (ரூ.240)
சென்னை - திருச்சி - ரூ.235 (ரூ.175)
சென்னை - நெல்லை - ரூ.440 (ரூ.325)
சென்னை - கன்னியாகுமரி - ரூ.505 (ரூ.380)
சென்னை - செங்கோட்டை - ரூ.445 (ரூ.330)
சென்னை - தஞ்சாவூர் - ரூ.280 (ரூ.210)
சென்னை - சேலம் - ரூ.240 (ரூ.190)
சென்னை - நாகப்பட்டினம் - ரூ.240 (ரூ.180)
சென்னை - கும்பகோணம் - ரூ.225 (ரூ.180)
சென்னை - தூத்துக்குடி - ரூ.425 (ரூ.315)
சென்னை - தேனி - ரூ.355 (ரூ.270)
சென்னை - கோவை - ரூ.395 (ரூ.275)

0 கருத்துகள்: