தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.12

மேலாடையின்றி இந்திய தேசிய கொடியை அவமதித்த 4 உக்ரைன் பெண்கள் கைது

உக்ரைன் உள்பட மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த பெண்களுக்கு விசா வழங்க கடும் கட்டுப்பாடுகளை இந்தியா கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் பெண்கள் அரை நிர்வாணமாக வந்து இந்திய தேசிய கொடியை கிழித்து எறிந்தனர். இதில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.பாலியல் தொழிலுக்காக பல பெண்கள் நாடு விட்டு நாடு கடத்தப்படுகின்றனர். சுற்றுலா, வீட்டு வேலைக்காக என்று பல காரணங்களை சொல்லி விசா
பெறுகின்றனர். இப்படி பல நாடுகளில் இருந்தும் பெண்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். குறிப்பாக உக்ரைன் உள்பட மத்திய ஆசிய நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் இந்தியாவுக்கு பாலியல் தொழிலில் ஈடுபட வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, இந்த நாடுகளை சேர்ந்த  இளம்பெண்களுக்கு விசா வழங்கும் நடைமுறைகளை இந்திய அரசு கடந்த மாதம் கடுமையாக்கியது. குறிப்பாக உக்ரைனை சேர்ந்த 14 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட பெண்களின் விசா விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்யும்படி இந்திய வெளியுறவுத் துறை உத்தரவிட்டது. இதற்கு உக்ரைன் பெண்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தலைநகர் கீவ் நகரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு எதிரில் திடீரென ஏராளமான இளம்பெண்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களில் பலர் மேலாடைகளை களைந்து அரை நிர்வாணமாக கோஷம் எழுப்பினர். சிலர் இந்திய தேசிய கொடிகளை கிழித்து ஜன்னல், கதவுகள் மீது அடித்து கீழே வீசினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், Ôஉக்ரைன் விபசார நாடு அல்லÕ, Ôநாங்கள் விபசாரிகள் அல்லÕ என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்தி இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் கூறினர்.

உக்ரைனில் பேச்சுரிமை, சுதந்திரம் வேண்டும் என்று கோரி கடந்த 2008ம் ஆண்டு முதல் பெண்கள் திடீர் திடீரென ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். மேலாடைகளை களைந்து அரை நிர்வாண போராட்டம் நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு முன் அரை நிர்வாண போராட்டம் நடத்திய பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் அபராதம் விதிக்கப்பட்ட பின் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்போதுதான் முதல் முறையாக கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: