தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.12

ஈரான்,பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் கூட்டாக அமெரிக்காவிற்கு எச்சரிக்கை.

தங்களது உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வே ண்டாம் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடு களுக்கு ஈரான், பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் ஆகி ய நாடுகள் கூட்டாக மறைமுக எச்சரிக்கை விடுத்து ள்ளன. ஈரான், பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் ஆகிய 3 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற முத்தரப்பு மாநா டு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள் ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி, ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத், அஃப்கனிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளால் தங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் எழுந்துள்ள பிரச்னைகள் குறித்து 3 தலைவர்களும் விவாதித்தனர். 


பின்னர், அவர்கள் மூவரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், தங்களது உள்நாட்டுப் பிரச்னையில் அன்னிய நாடுகள் தலையிட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டது.
 

தீவிரவாத ஒழிப்பு, பொருளாதார மேம்பாடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதி, மின் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் 3 நாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பான ஒப்பந்தமும் இந்த மாநாட்டில் கையப்பமானது. 


ஈரான், பாகிஸ்தான், அஃப்கனிஸ்தான் பங்கேற்கும் அடுத்த முத்தரப்பு மாநாடு, காபூலில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டத்தால் எரிச்சலடைந்துள்ள அமெரிக்கா, அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத்தடை விதித்துள்ளது. 

தாலிபான் பயங்கரவாதிகளை அடக்குவதற்காக அஃப்கனிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் படையினர், அவ்வப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: