தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.2.12

புதிய போர்க்குற்ற ஆவணப்படத்தை சனல்-4 அடுத்தமாதம் வெளியிடுகிறது – குழப்பத்தில் சிறிலங்கா!


சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி, சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது. சனல்-4

வெளியிட்ட ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்திவழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார்.
ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு நெருடிக்கடியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சனல்-4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை – புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் வெளியிடப் போவதாக கூறியிருந்தது.

0 கருத்துகள்: