தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.11

மத்திய கிழக்கு : பகரெய்னில் மாபெரும் ஆர்பாட்டம் வெடித்தது


ஜப்பானிய சுனாமி மத்திய கிழக்கு வடக்கு ஆபிரிக்க போராட்ட செய்திகளின் மீதும் சுனாமி போல பாய்ந்துள்ளதால் கடந்த இரண்டு தினங்களாக முதன்மை குறைந்திருந்த மத்திய கிழக்கு ஆர்பாட்டங்கள் இன்று மறுபடியும் சூல் கொண்ட மேகமாக திரும்பியுள்ளன. இந்த அல்லோல கல்லோலத்தில் மத்திய கிழக்கு பகரெய்னில் மாபெரும் ஆர்பாட்டம் இன்று ஞாயிறு அதிகாலை வெடித்தது. பகரெய்ன் தலைநகர் மனாமாவில் உள்ள பாரல் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான ஆர்பாட்டக்காரர் திரண்டு வந்தனர். பெருந்தொகையாகக் குவிக்கப்பட்ட படையினர் கண்ணீர்புகை, இறப்பர் குண்டுகளை சுட்டபடி ஆர்பாட்டக்காரரை தாக்கினார்கள். கண்ணீர் புகையால் பாதிக்கப்பட்ட 350 பேர்
வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். படையினரின் கொடுந் தாக்குதல் நடைபெற்றாலும் அமைதி அமைதி என்ற பேரொலியுடன் ஜனநாயகத்திற்கான போராட்டம் பேரலையாக இயங்க ஆரம்பித்துள்ளது. கோபமடைந்த ஆர்பாட்டக்காரர் கவச வாகனங்களை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை இல்லாதளவு சாதனைத் தொகையாக மக்கள் குவிந்துள்ளதாக மேலைத்தேய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை குழுமிய ஆர்பாட்டக்காரரால் போக்குவரத்தே தம்பிதமடைந்தது. நாட்டின் மன்னர் கமீட் பின் இஸாவை பதவி விலகும்படி ஆர்பாட்டக்காரர் கோரியுள்ளனர். சுனாமி ஒரு பக்கம், அணுக்கசிவு மறுபக்கம், நில நடுக்கம் இன்னொரு புறம் மக்கள் போராட்டம் அடுத்த பக்கம். பொருளாதார நெருக்கடியில் மேலை நாடுகள் சுழல்கிறது வேகமாக உலகம்.

0 கருத்துகள்: