தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

15.3.11

அமெரிக்கா:பி.ஜே.க்ரவ்லி ராஜினாமா

வாஷிங்டன்,மார்ச்.13:அமெரிக்க அரசுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜே.க்ரவ்லி தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க தூதரக ஆவணங்களை கசியவிட்டதற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார் பிராட்லி மானிங். இவர் அமெரிக்க ராணுவ உளவுத்துறையில் பகுப்பாய்வாளராக பணியாற்றியவர். இவரை அமெரிக்க ராணுவம் நடத்தும் முறை குறித்து பி.ஜே.க்ரவ்லி நேற்று முன்தினம் விமர்சித்திருந்தார்

பி.ஜே.க்ரவ்லியின் விமர்சனம் அமெரிக்காவில் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதனைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமாச் செய்துள்ளார்.

அமெரிக்க ராணுவத்தின் செயல் பரிகசிக்கத்தக்க, முட்டாள்தனமான, விவேகமற்றது என பி.ஜே.க்ரவ்லி கூறியிருந்தார். இது தனது தனிப்பட்ட அபிப்ராயம் எனவும், இதன் முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் பின்னர் பி.ஜே.க்ரவ்லி தெரிவித்திருந்தார்.

க்ரவ்லியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

க்ரவ்லியின் ராஜினாமாவைத் தொடர்ந்து துணைச் செய்தித் தொடர்பாளராக பணியாற்றும் மைக்கேல் ஹாமர் தற்காலிகமாக க்ரவ்லியின் பதவியை வகிப்பார் என ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார்.

கடந்த 2009 மே மாதம் முதல் அமெரிக்க அரசுத்துறையில் செய்தித் தொடர்பாளராக சேவையாற்றி வந்தார் க்ரவ்லி. கிளிண்டன் ஆட்சியின்போது பாதுகாப்பு ஆலோசகரின் சிறப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

செய்தி:மாத்யமம்

0 கருத்துகள்: