தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.11.11

பிணம் உயிர்த்தெழுந்தது: இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இடைநீக்கம்


லக்னோ, நவம்பர் 11 இறந்தவிட்டதாக நம்பப்பட்டு பிணவறையில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இளைஞர் திடீரென உயிர்த்தெழுந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து இறப்புச் சான்றிதழ் வழங்கிய மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முஸாபர்நகர் மாவட்ட மருத்துவமனையில் இச்சம்பவம்
நிகழ்ந்துள்ளது.
இம்மாவட்டத்தில் ரத்தே (வயது 17) என்ற இளைஞர் விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்துள்ளார். மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்ததுடன் இறப்புச் சான்றிதழையும் வழங்கியுள்ளார். நள்ளிரவாகிவிட்டதால் மறுநாள் பிரேத பரிசோதனை செய்யலாம் என உடலை பிணவறையில் கிடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்து போலீஸ் அதிகாரிகள் விவரங்களைச் சேகரித்தனர்.
மறுநாள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவரும் ஊழியர்களும் வந்தபோது ரத்தே உயிர்த்தெழுந்துள்ளார். இதைப் பார்த்தவுடன் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ரத்தே சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஒருவர் இறந்துவிட்டாரா, இல்லையா என்றுகூட முடிவுசெய்ய இயலாத மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

0 கருத்துகள்: