ஐ.நா.வில் காலியாக உள்ள உயர் பதவியை கைப்பற்றும் போட்டியில் இந்தியாவும், சீனாவும் நேரடியாக மோத உள்ளன. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் கோபிநாதனும் சீனாவின் சார்பில் தற்போ‘தைய சீன தூதர் ஜாங்யானும் களத்தில் மோத தயாராக உள்ளனர்.ஐ.நாவில் காலியாக உள்ள இந்த பதவிக்கு கடந்த 1977க்கு பின்னர் இந்தியா
மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவை பொறுத்த வரையில் கடந்த 2003-ம் ஆண்டில் பதவிவகித்து வந்துள்ளது. இருப்பினும் தற்போது இந்தியாவுடன் போட்டியிட உள்ளது. இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் சம பலத்துடன் இருப்பதால் அதிகாரமிக்க இப்பதவியையும் கைப்பற்றுவதில் இருநாட்டு அதிகாரிகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இதற்காக பல்வேறு நாடுகளின் ஆதரவை பெற்று வருகின்றனர்.மேலும் இப்பதவிக்கு மோதும் சீன அதிகாரி ஜாங்யான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய வரைபடத்தில் காஷ்மீர் மாநிலம் மற்றும் அருணாசல பிரதேச மாநிலம் இல்லாமல் இருப்பது குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு வாயைமூடு என்று பதில் கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக