மாலத்தீவில் நடைபெற்றுவரும் சார்க் நாடுகளின் 17 வது மாநாட்டிக்காக சென்றுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டு பிரதமர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இப்பேச்சுக்கள் ஆக்கபூர்வமாகவும் முன்னேற்றம் தருவதாகவும் இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கருத்து தெரிவிக்கையில்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் உறுப்பு நாடாவதற்கு இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
மேலும் பேச்சுவார்த்தையின் பின்னர் கருத்து தெரிவித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்க் இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையூட்டுவதாகவும் அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக