சென்னை, நவ.11 - அத்வானி ரத யாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைத்த சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் போலீஸ் பக்ருதீனை இதுவரை கைது செய்யவில்லை என்று தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
சென்னையை சேர்ந்த அப்துல்லா என்பவர் தனது நண்பர் போலீஸ் பக்ருதீனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். ஆனால்
இதுவரை அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தவில்லை. அவரை போலி என்கவுண்டரில் சுட்டுத்தள்ள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆகவே சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் நாகப்பன், சுதந்திரன் ஆகியோர் விசாரித்தனர். போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் மகாராஜன் ஆஜராகி போலீஸ் பக்ருதீன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், இந்த தகவலை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி அரசு வக்கீலுக்கு உத்தரவிட்டனர். அதன்படி மதியம் எழுத்துபூர்வமாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், பக்ருதீனை போலீசார் கைது செய்ததற்கான நேரடி சாட்சிகள் இல்லை, அவரை காவலில் வைத்ததற்கான ஆதாரம் கிடையாது. ஆகையால் இந்த வழக்கை பைசல் செய்து உத்தரவிடுகிறோம் என்று கூறினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக