தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.1.11

சர்ச்சுகள் மீதான தாக்குதல்:ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் பரிசுத்தமானவர்கள் என கமிஷன் நற்சான்றிதழ்

பெங்களூர்,ஜன:2008 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆளுங்கட்சியான பா.ஜ.கவுக்கு, சங்க்பரிவார அமைப்புகளுக்கும் தொடர்பில்லை என நீதிபதி சோமசேகர கமிஷன் தெரிவித்துள்ளது.

நேற்று கர்நாடகா அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்தான் கமிஷன் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு 'சுத்தமானவர்கள்' என்ற சான்றிதழை வழங்கியுள்ளது.

சங்க்பரிவாரின் அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சிக்கு வந்த 4 மாதங்களிலேயே அதாவது, 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெங்களூர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெல்லாரி, தாவணகெரே, சிக்மகளூர், உடுப்பி, தென்கன்னடம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் பற்றி விசாரிக்க ஒரு நபர் கமிஷனை பா.ஜ.க அரசு நியமித்தது.

இக்கமிஷன் வெள்ளிக்கிழமை கர்நாடகா பா.ஜ.க முதல்வர் எடியூரப்பாவிடம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியுள்ள முக்கியக் கருத்துக்கள்:

பெங்களூர், கோலார், சிக்பள்ளாப்பூர், பெல்லாரி, தாவணகெரே, சிக்மகளூர், உடுப்பி, தென்கன்னடம் மாவட்டங்கள், குறிப்பாக மங்களூர் மற்றும் தாவணகெரே நகரங்களில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது உண்மை. எல்லாத் தாக்குதல் சம்பவங்களும் தற்செயலாக அல்லது விபத்தாக நேர்ந்ததல்ல.

சில சம்பவங்கள் பல ஆண்டுகளாக நிலவிவரும் அடிப்படைவாதத்தின் திட்டமிட்ட மதத் தாக்குதலாகும். மங்களூரில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்தை நியாயப்படுத்த இயலாது. இது கிறிஸ்தவ மக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.

இத்தாக்குதல் சம்பவங்களில் அசல் ஹிந்துக்களின் நேரடி அல்லது மறைமுக பங்களிப்பு இல்லை. இச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் போலீஸார் சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர். இத் தாக்குதல் சம்பவங்களில் அரசியல்வாதிகள், பாஜக, சங்பரிவார் அமைப்புகள் மற்றும் மாநில அரசுக்கு நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இருந்துள்ளதாக கிறிஸ்தவ மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. இச் சம்பவத்தை அரசியலாக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் கமிஷன் முன்பு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹிந்துக்களை அவமானப்படுத்தும் விதத்திலான பிரசுரங்களும், மதமாற்றம் தொடர்பான பிரச்சனைகளும்தான் இத்தாக்குதல்களுக்கு காரணம் எனக்கூறி தாக்குதலை நியாயபடுத்தியுள்ளது சோமசேகர கமிஷன்.

மதமாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் இக்கமிஷன் அரசுக்கு பரிந்துரைச் செய்துள்ளது.

அறிக்கையில் முரண்பாடு- முன்னாள் மத்திய அமைச்சர்: தேவாலயங்கள் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் நீதிபதி சோமசேகர் கமிஷனின் அறிக்கையில் முரண்பாடு உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் பூஜாரி குற்றம் சாட்டியுள்ளார்.

தேவாலயங்களின் மீது தாக்குதல் நடந்த பிறகு அது குறித்து பஜ்ரங் தள பொதுச்செயலாளர் மகேந்திரகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்பதாக தெரிவித்தார். இத் தாக்குதலுக்கு போலீஸாரின் ஆதரவும் இருந்தது என ஆரம்ப கட்ட விசாரணையில் நீதிபதி சோமசேகர் தெரிவித்திருந்தார்.

தற்போது இறுதி அறிக்கையில் பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகள் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை காங்கிரஸ் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பூஜாரி தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்: