தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.2.11

ஹோஸ்னி முபாரக்கின் மனைவி, மகன் லண்டனுக்கு ஓடியதாக தகவல்

கெய்ரோ: எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்கின் மனைவி மற்றும் மகன் தனி விமானம் மூலம் ரகசியமாக லண்டனுக்குத் தப்பி ஓடி விட்டதாக எகிப்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

82 வயதாகும் முபாரக் கடந்த 30 வருடங்களாக எகிப்தை தனது பிடியில் வைத்துள்ளார். தனக்குப் பின்னர் தனது மகன் கமால் முபாரக்கை அதிபராக்க அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதற்குள் அங்கு மக்கள் புரட்சி வெடித்துள்ளது.

முபாரக் குடும்பம், கடும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள நிலையில், தற்போது முபாரக்குக்கு எதிர்ப்பு பல மடங்காக அதிகரித்து வருவதால் நாட்ட்டை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கமால் முபாரக் தனது மனைவி மற்றும் மகளோடு லண்னுக்கு தப்பி ஓடி விட்டதாக அக்பர் அல் அராப் என்ற எகிப்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேபோல முபாரக்கின் மனைவியும் லண்டனுக்குப் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கமால் முபாரக்கும், அவரது மனைவி, குழந்தையும், தனியார் விமானம் மூலம் லண்டனுக்குப் போய் விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெட்டி பெட்டியாக ஏராளமான பொருட்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அவை பணமா என்ன என்பது குறித்துத் தெரியவில்லை.

வெளிநாட்டவர்கள் வெளியேற உத்தரவு

இதற்கிடையே, போராட்டம் வலுத்து வருவதைத் தொடர்ந்து எகிப்தில் தங்கியுள்ள வெளிநாட்டினர்களை வெளியேறுமாறு அவர்கள் சார்ந்த நாடுகளின் அரசுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அவர்கள் பாதுகாப்புடன் வெளியேறுவதற்காக ஒவ்வொரு நாடும் சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்து வருகின்றன. இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

கனடா, துருக்கி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் தங்களது நாட்டவர்கள் எகிப்தில் இருக்க வேண்டாம் என எச்சரிக்கை அறிவுரையை பிறப்பித்துள்ளன. இவர்களை தங்களது விமானங்கள் மூலம் எந்தவிதக் கட்டணமும் இன்றி சொந்த நாட்டுக்கு அழைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளன.

0 கருத்துகள்: