தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.2.11

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு-கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது

மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

மாலேகானில் கடந்த 2008ம் ஆண்டு குண்டுள் வெடித்தன. ரம்ஜான் மாதத் தொழுகையின்போது அங்குள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் டிபன் பாக்ஸ்களில் குண்டுகள் வைக்கப்ப்டிருந்தன. இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்பான அபினவ் பாரத்துக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தைச் சேர்ந்த பிரவீன் முத்தலிக் கைது செய்யப்பட்டுள்ளார். குண்டு வைத்த மூன்று பேரில் பிரவீன் முத்தலிக்கும் ஒருவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்ற இருவரான ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகியோர் இதுவரை பிடிபடாமல் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட முத்தலிக் மும்பையில் உள்ள மகாராஷ்டிர சட்டவிரோத செயல் தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பிப்ரவரி 14ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். முத்தலிக்கையும் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்கள் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் லெப்டினென்ட் கர்னல் ஸ்ரீகாந்த் பிரசாத் புரோஹித் ஆவர்.

0 கருத்துகள்: