
புதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த பாகப்பிரிவினை தீர்ப்பிற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முஸ்லிம் அமைப்புகள், வரலாற்றாய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
வரலாற்று உண்மைகளையும், சொத்துரிமை ஆவணங்களையும் பரிசோதிக்காமல்
பெரும்பான்மை நம்பிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட கீழ் நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது மகிழ்ச்சி அளிப்பதாக முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் கீழ் இயங்கும் பாப்ரி மஸ்ஜித் கமிட்டியின் கன்வீனர் டாக்டர்.எஸ்.க்யூ.ஆர்.இல்லியாஸ் தெரிவித்துள்ளார்.மஸ்ஜிதின் மீது தங்களுடைய உரிமையை நிரூபிக்கும் ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்த போதும் அவற்றையெல்லாம் பரிசீலிக்காமல் நம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே தீர்ப்பை வெளியிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தது என இல்லியாஸ் சுட்டிக்காட்டினார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பு விந்தையானதும், வினோதமானதுமாகும் என உச்ச நீதிமன்றத்தின் கருத்து மிகவும் வரவேற்கத்தக்கது என அனுபம் கேர், டாக்டர்.கெ.எம்.ஸ்ரீமதி, மகேஷ் பட், டாக்டர்.கே.என்.பணிக்கர், பேராசிரியர் ரூபரேக வர்மா, ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக