தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

11.5.11

அப்துல்நாஸர்மஃதனி:வெள்ளிக்கிழமை ஜாமீன் மனு மீதான புதிய பெஞ்சின் விசாரணை


T-Naseer
புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி கட்சி தலைவர் அப்துல்நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணை புதிய பெஞ்சின் முன்னிலையில் வருகிற வெள்ளிக்கிழமை வரவிருக்கிறது.
முன்னர் ஜாமீன் மனு மீதான விசாரணையில் நீதிபதிகளுக்கிடையே உருவான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து புதிய பெஞ்சிற்கு வழக்கு விடப்பட்டது. ஜாமீன் மனுவில் தீர்மானம் எடுக்க
நீதிபதிகளான எ.எம்.பாஞ்சால், ஹெச்.எல்.கோகலே ஆகியோர் அடங்கிய புதிய பெஞ்சிற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா உத்தரவிட்டார்.
கடந்த மே 4-ஆம் தேதி மஃதனியின் ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது இரண்டு நீதிபதிகளை கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்சில் அப்துல்நாஸர் மஃதனிக்கு பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் பங்கிருப்பதற்கு ஆதாரமில்லை எனவும், ஜாமீன் அனுமதிக்கலாம் எனவும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கருத்து தெரிவித்தார்.
கிரிமினல் சதித்திட்டத்தில் மஃதனி பங்கேற்றதற்கு ஆதாரமிருப்பதாகவும்,மஃதனிக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது எனவும் நீதிபதி ஞான்சுதா மிஸ்ரா கருத்து தெரிவித்தார். நீதிபதிகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து ஜாமீன் மனு புதிய பெஞ்சிற்கு விடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறைக்கு முன்பு வழக்கை விசாரணைக்கு எடுக்கவேண்டும் என மஃதனியின் வழக்கறிஞர் சாந்திபூஷனின் கோரிக்கையை பெஞ்ச் தலைமை நீதிபதி பரிசீலனைக்கு விடப்பட்டது.

0 கருத்துகள்: