
இஸ்லாமாபாத்: செப்டம்பர் 2001-ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் 3000-கும் மேலானோர் பலியாகினர். அன்று முதல் கடந்த 10 வருடங்களாக அமெரிக்காவின் தீவிரவாதி பட்டியலில் இருந்த, அச்சம்பவத்திற்கு காரணமாக கருதப்படும் அல் கொய்தாவின் தலைவர் உஸாமா பின் லாடின் கடந்த 2-ஆம் தேதி அமெரிக்காவின் அதிரடி தாக்குதலால் மரணம் அடைந்ததையொட்டி ஒசாமாவின் விளம்பர சுவரொட்டிகள் மிக அதிக எண்ணிக்கையில் விற்க்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் மரணித்த அன்று முதல் இன்றும் வரை ஒரு லட்சத்திற்கும் மேலான விளம்பர சுவரொட்டிகள் விற்கப்பட்டு சாதனை படைத்துள்ளதாக பாகிஸ்தானின் உள்ள செய்திக்கான இணையதளங்கள் தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக