தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.8.11

பாகிஸ்தான் தொலைதொடர்பு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது சீனா

பெய்ஜிங், ஆக. 13-   சீனாவின் தொழில்நுட்ப வழிமுறை, நிதி ஆதார உதவிகளுடன் உருவாகிய தொலை தொடர்பு செயற்கைகோளை பாகிஸ்தான் விண்ணிற்கு அனுப்பியது.
பாக்சாட்- 1 ஆர் என்ற இந்த செயற்கைகோள் பாகிஸ்தான் நாட்டின் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களால் உருவாக்கப்பட்டது. இதற்கு சீனா ஆலோசனையும், நிதி உதவியும் செய்திருக்கிறது.
லாங் மார்ச் 3 பி ராக்கெட் மூலம் இன்று அதிகாலையில் சீனாவின் னிசாங் அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.
இந்த செயற்கை கோள் மூலம் பாகிஸ்தானின் தொலை தொடர்பு துறை வளர்ச்சிப்பாதைக்கு செல்லும். குறிப்பாக இதன் உதவியுடன், பிராட்பேண்ட் இன்டர்நெட், டிஜிட்டல் டெலிவிசன் பிராட்காஸ்ட், கிராமப்புற தொலை வளர்ச்சி மற்றும் தொடர்பே இல்லாத பகுதிக்கும் இணைப்புகள் வழங்கும் சக்தி, அவசரகால தொடர்புகள், டெலிஎஜுகேசன் மற்றும் டெலிமெடிசின் ஆகியன பெற முடியும். இந்த பாக்சாட் இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்த சேவைய தரும் பலம் கொண்டது.
இந்த செயற்கை கோள் சீனாவின் மையத்தில் இருந்து விண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டபோது பாகிஸ்தான் ராணுவ தளவாட பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் கலீத் அகம்மது கிட்வால், வெளியுறவு செயலர் சல்மான் பசீர், சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத்கான் மற்றும் இரு நாட்டு அதிகாரிகளும் குழுமி இருந்தனர். செயற்கைகோள் வெற்றிகரமாக பாய்ந்ததும் இரு தரப்பினரும் கை குலுக்கிவாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
இது ஒரு மகிழ்வு சம்பவம் என கலீத் அகம்மது கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாகிஸ்தானுக்கு, சீனா விண்வெளி அறிவியலில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இது எதிர்காலத்தில் தொடர்ந்து வளர்ச்சி நிலையில் இருக்கும் என்றார்.
கடந்த மாதம் இதே போன்று தன்மை கொண்ட ஜி சாட் -12 ராக்கெட்டை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தனர் என்பதும் இது முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: