தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

13.8.11

உலகின் அதிவேக விமானம் பரிசோதனையின் போது மாயம்


உலகில் இதுவரை அறியப்பட்டவற்றில், அதிக வேகமாக பயணிக்கும் திறன் கொண்ட ஹைபர்சோனிக் விமானம் (ஒலி விமானம்) நேற்றைய
பரிசோதனை நடவடிக்கையின் போது காணாமல் போய்விட்டதாக அமெரிக்க பெண்டகன் விமான கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.  ஒலியின் 20 மடங்கு வேகத்தில், பயணிக்கும் திறன் கொண்ட இவ்விமானம் இரண்டாவது தடவையாக பரிசோதிக்கப்பட்ட போதே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.


கலிபோர்னியாவின் வான்டென்பேர்க் விமான படை தளத்திலிருந்து The Falcon HTV-2 ராக்கெட் மூலம் விண்ணுக்கு செலுத்தப்பட்ட இவ்விமானம் வெற்றிகரமாக ராக்கெட்டிலிருந்து பிரிந்து கொண்டதாக DAEPA அமைப்பு முன்னர் தெரிவித்திருந்தது.

எனினும் 26 நிமிடத்திக் விமானபடைத்தளத்துடனான தொடர்புகளை அது துண்டித்துக்கொண்டுள்ளது.

இதையடுத்து இவ்விமானம் பசுபிக் சமுத்திரத்தில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்குள் பூமியின் எந்தப்பாகத்தையும் அடைந்துவிட கூடிய வசதியும்,  எதிர்காலத்தில்  உலகின் எந்தவொரு  இராணுவ இலக்குகளையும் ஒரு சில நிமிடங்களுக்குள் தாக்குதல் நடத்தக்கூடிய தொழில்நுட்பத்தையும் இவ்விமானம் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. புதிய நவீன ரக ஆயுதங்களின் கண்டுபிடிப்பின் போது அவ்வப்போது எதிர்கொள்ள நேரிடும் சவால்கள் தான் இவ்விபத்து என DAEPA அமைப்பு தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

0 கருத்துகள்: