புகைப்படம் மற்றும் செய்தி விரைவில் இன்ஷா அல்லாஹ்..
பாபர் மசூதி வழக்கில் சட்டவிரோதத் தீர்ப்பைக் கண்டித்து அலைகடலென ஆர்ப்பரித்த மக்கள் வௌளம்
அறுபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பாபர் மசூதி இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் அலகாபாத் உயர்நீதி மன்ற பெஞ்ச் வழங்கிய தீர்ப்பு சர்வதேச நீதி நெறிமுறைகளுக்கு எதிராகவும் இந்தியாவின் உரிமையியல் சட்டத்துக்கு எதிராகவும் அளிக்கப்பட்ட அநியாயத் தீர்ப்பு என்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதயாமும் கருதுகிறது. மத உணர்வுக்கு அப்பாற்பட்ட நியாவான்களும் இந்தக் கட்டப் பஞ்சாயத்து தீர்ப்பை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.பாபர் மசூதி இருந்த இந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படி முடிவு எடுக்க எந்தச் சட்டவிதியும் உரிமையியல் சட்டத்தில் இல்லை. இது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
அப்படியே ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் பிறந்திருந்தால் அதற்காக அவர் அந்த இடத்தின் உரிமையாளராவார் என்று இந்தியாவிலும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் சட்டம் இல்லை. எனவே இவர்களின் தீர்ப்பு சட்ட விரோதமானது.
குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அந்த இடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்று தோண்டிப்பார்க்க வேண்டும் என்று இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ சட்டம் இல்லை. இதையும் அந்த நீதிபதிகள் மீறியுள்ளனர்
தோண்டப்பட்ட இடத்தில் கிடக்கும் பொருளைக் கொண்டு இன்னார் இந்தமாதிரியான கட்டடத்தை இடித்தார் என்று கண்டு பிடிக்கலாம் என்று இந்திய உரிமையியல் சட்டத்தில் சட்ட விதி ஏதும் இல்லை. இதையும் நீதிபதிகள் மீறியுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் ராமருக்கு கோவில் இருந்தது என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலையல்ல. அந்த வேலையை நீதிபதிகள் செய்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்தார் என்று கற்பணையாக முடிவு செய்யும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை.
ஆவணம் யார் பெயரில் இருந்தது என்பதை பார்ப்பதுதான் நீதிமன்றத்தின் வேலை. ஆனால் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
யாருடைய அனுபவத்தில் இருந்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 1528 முதல் 450 வருடம் முஸ்லிம்களின் அனுபவத்தில்தான் இருந்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த உண்மையையும் நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை.
ஒரு இடம் குறித்து தீர்ப்பு அளிப்பதற்கு ஸ்டேட்டஸ் கோ – அதாவது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி நீடிப்பது – என்ற நிலை வழக்கு தொடுத்த நேரத்தில் உள்ள நிலையைத்தான் குறிக்கும். வழக்குத் தொடுத்த 1949 ல் அது முஸ்லிம்களிடம்தான் இருந்தது. அதை அலட்சியம் செய்து விட்டு இப்போது அது பள்ளிவாசலாக இல்லை என்று கூறியிருப்பது அப்பட்டமான மோசடியாகும்.
1992 வரை அது பள்ளிவாசலாக இருந்தது என்பதும் அது திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதும் உலகறிய நடந்ததாகும். ஆனால் இப்போது பள்ளிவாசல் அங்கே இல்லை என்பதால் அது இந்துக்களுக்குச் சொந்தம் எனக் கூறியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். பள்ளிவாசல் இடிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன தீர்ப்பு சொல்வார்கள்? இடிக்கச் சொல்லி உத்தரவு போடுவார்களா?
இப்படி அடுக்கடுக்கான சட்ட மீறல்கள் செய்து சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இது வரை நடந்திராத மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இதில் தீர்ப்பு அளிக்க முடியாது என்று கூறி வந்த இந்துத்துவா இயக்கங்கள் அமைதி காக்குமாறு வழக்கத்துக்கு மாறாக அறிக்கைகள் விட்டது இந்தத் தீர்ப்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
நீதிமன்றங்களை நாம் மதிப்பது அவர்கள் சட்டப்படி தீர்ப்பளிக்கும் அதிகாரத்தில் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான். அந்த நபர்களுக்காக அல்ல. சட்டத்தின்படி அளிக்கப்படாத இந்தத் தீர்ப்பை ஒட்டு மொத்த இந்திய முஸ்லிம் சமுதாயம் மட்டுமின்றி உலக முஸ்லிம் சமுதாயமும் வன்மையாகக் கண்டிக்கிறது. இந்தச் சட்ட விரோதத் தீர்ரபை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் சமுதாயத்தின் சார்பில் வனமையாகக் கண்டிக்கிறோம். உச்ச நீதி மன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன் படுத்தி இந்த அநீதியான தீர்ப்பை மறு பரிசீனைக்கு தானாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதில் மாநில பொதுச்செயலாளா ஆ.அப்துல் ஹமீது அவாகள் தலைமை தாங்கினார். நிறுவனத் தலைவா .ஜைனுல் ஆபிதீன் அவாகள் கண்டன உரையாற்றினாகள்.காலை 11 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் மாலை மணிக்கு முடிந்தது.
இப்படிக்கு
ஆ.ரஹ்மத்துல்லாஹ்
மாநில துணைத் தலைவார்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் செய்தி:www.tntj.net
0 கருத்துகள்:
கருத்துரையிடுக