நியூயார்க், ஜூலை. 15- மும்பையில் நேற்று மாலை நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மும்பை மாநகரில் 3 இடங்களில் நேற்று மாலை 6.50 மணி தொடங்கி அடுத்தடுத்த சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 21 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பான் கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பான் கி-மூன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக