தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.7.11

ஷார்ஜா:கொலை குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க 3.4 மில்லியன் திர்ஹம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு


ஷார்ஜா:பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 17 இந்தியர்களை விடுவிக்க வருகின்ற புதன்கிழமைக்குள் 3.4 மில்லியன் திர்ஹம்  நீதிமன்றத்தில் அளிக்க ஷார்ஜா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அல் கிசைசில் உள்ள கிராண்ட் ஹோட்டலின் உரிமையாளர் S.P.சிங் இது பற்றி கூறுகையில் நீதிமன்றம் கூறியுள்ள மொத்த தொகையையும் கொலை
செய்யப்பட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரின் குடும்பத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் மேலும் மொத்த தொகையும் தயாராக இருப்பதாகவும் நாளை கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
S.P.சிங் எமிரேட்ஸ் 24X7 பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது முன்னதாக முன்பணம் செலுத்தியுள்ளதாகவும் மீதமுள்ள தொகை தயார் நிலையில் உள்ளது என்றும் நாளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். பணம் செலுத்திய பிறகு மன்னிப்பு கடிதம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 2009-ம் ஆண்டு ஷார்ஜா தொழிற் பகுதியில் இரு குழுவினருக்கு இடையிலான கள்ளச்சாராயம் தொடர்பான தகராறில் மிஸ்ரி நசிர் கான் என்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நபரை கொலை செய்ததற்காக 17 இந்தியர்கள் ஷார்ஜாவில் கைது செய்யப்பட்டனர். கீழ் நீதிமன்றத்தில் மரண தண்டனை கிடைத்ததன் பேரில் கொலைக் குற்றவாளிகள் சார்பாக மேல்முறையீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: