தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.11

சூரியனில் பாரிய கரும்புள்ளி புவிக்கு பாதிப்பு


சூரியன் தன்னுடைய அதிஉயர் வெப்பமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மிகப் பிரமாண்டமான தீப்பிளம்புகள் சீறிப்பாய தொடங்கியிருப்பதை புதிய சாட்லைட் புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்தப் புள்ளிகள் புவியை நோக்கி பாரிய வெப்ப அலைகளை பிறப்பிப்பதால் புவிக்கு அதனால் பாரிய பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்தையே இங்கு காண்கிறீர்கள் புவியைவிட 13 மடங்கு பாரிய அளவில் இந்த அக்கினிக் கக்குகை இடம் பெற்றுள்ளது. இந்தக் கரும்புள்ளி சூரிய வெப்பத்தை உட்பக்கமாக கட்டுப்படுத்தி வைத்திருக்கும் காந்தம் உடைந்துள்ளதைக் காட்டுகிறது. இப்பகுதியில் வெப்பம் கக்குகைக்கு பின்னர் 5500 பாகையில் இருந்து 4000 ஆக வீழ்ச்சியடையும். மேலும் புவியின் வடபகுதியில் பாரிய வெளிச்சமும் காணப்படும். கடந்த திங்கள் புவியின் காந்த மண்டலத்தில் இந்த அலைகள் மோதியுள்ளன. அண்டவெளியில் பறந்து கொண்டிருக்கும் சாட்லைட்டுகளுக்கு இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் வானியலாளர் கூறுகின்றனர். இந்த நிகழ்வின் தாக்கங்களை நமது அன்றாட வாழ்வில் அவதானிக்கலாம் என்று டேனிஸ் ருக்கபாக வானியல் ஆராய்ச்சி நிலையம் தெரிவிக்கிறது. இதுபோன்ற ஒரு தாக்கம் ஏற்பட்டு டென்மார்க் மல்ம்உய் பகுதியில் முற்றாக மின்சார துண்டிப்பு ஏற்பட்டது. அதுபோல 1989 ம் ஆண்டு அமெரிக்காவின் வடபகுதி மின்சாரம் இல்லாமல் இருளில் கிடந்தமை கவனிக்கத்தக்கது.

0 கருத்துகள்: